நோய்த்தொற்று பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மாநகராட்சி சார்பில் காய்ச்சல் தடுப்பு முகாம்...






நெல்லை மாநகரில் கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் வசிக்கும் தெருவில் வசிப்பவர்களுக்கு உடல் வெப்ப சோதனை செய்யப்படுகிறது. நெல்லை மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம் 19வது வார்டு தியாகராஜநகர், பேராத்து செல்வி நகர் பகுதியில் இன்று நடந்த காய்ச்சல் தடுப்பு முகாமில் பெருமாள்புரம் ஆரம்ப சுகாதார மைய செவிலியர்கள் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த முகாமில் கபசுரக்குடிநீரும் வழங்கப்படுகிறது.