top of page

நெல்லையில் போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துவந்த நபர் குளத்துக்குள் குதித்து தப்பி ஓட்டம்...


தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச்சேர்ந்த மாயாண்டி என்பவர் போலீசார் நேற்று மாலை கைதுசெய்து பாளையங்கோட்டை அரசுமருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வந்துள்ளனர். அப்போது மாடசாமி தனக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தெரிவித்ததையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ய தயாரானநிலையில் சிறுநீர் கழிக்க செல்வதாக கூறி மாடசாமி அங்கிருந்து தப்பி ஒடினார். அவரை போலீசார் பின்தொடர்ந்து விரட்டிவந்த நிலையில் நெல்லை புதியபேருந்துநிலையம் அருகிலுள்ள வேய்ந்தான்குளத்தில் குதித்து தப்பி ஓட முயன்றுள்ளார். குளத்தை சுற்றிவளைத்த போலீசார் பாளையங்கோட்டை தீயணைப்புநிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். பாளையங்கோட்டை தீயணைப்புதுறையினர் நிலைய அதிகாரி வீரராஜ் தலைமையில் அங்குவந்து படகு மூலம் குளத்திற்குள் பதுங்கிய மாடசாமியை தேடினர். இருப்பினும் மாடசாமியை கண்டுபிடிக்கமுடியவில்லை.

20 views0 comments
bottom of page