திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம் பெருமாள்புரம் அலுவலகம் சார்பில் -மின் சிக்கன விழிப்புணர்வு நிகழ்ச்சி.
தமிழகத்தில், ஆண்டுதோறும், டிச., 14ம் தேதி முதல், 20ம் தேதி வரை, மின் சிக்கன விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்படுகிறது. அந்த நாட்களில், மின் வாரியம் சார்பில், பள்ளி, கல்லுாரிகளில், மின் சிக்கனத்தை வலியுறுத்தும் வகையில், பேச்சு, கட்டுரை போட்டிகளும், பொது மக்கள் கூடும் இடங்களில், மின் வாரிய அதிகாரிகள் பங்கேற்கும் மனித சங்கிலி, பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
அந்த வகையில், இந்த ஆண்டு மின் சிக்கன வாரம், (டிசம்பர் 14ம் தேதி முதல், 20ம் தேதி வரை) கொண்டாடப்படுகிறது. இதற்காக, மின் சிக்கனம் குறித்து, பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, மின் வாரியம் சார்பில், அரசு அலுவலகங்கள், மின் கட்டண மையங்களில், மின் சிக்கனத்தை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு, 'போஸ்டர்'கள் ஒட்டப்பட்டு வருகின்றன.மேலும், துண்டறிக்கை வாயிலாகவும், பொது மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.





தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம் பெருமாள்புரம் அலுவலகம் சார்பில் மின் சிக்கனம் தொடர்பான விளம்பரங்கள் மற்றும் துண்டு பிரசுரங்களை உதவி செயற்பொறியாளர் சின்னசாமி மற்றும் பணியாளர்கள் மின் நுகர்வோர்களிடம் வழங்கி மின் சிக்கனம் மற்றும் மின் சேமிப்பு பற்றி விளக்கப்பட்டது .