top of page

தேர்தல் பாதுகாப்பு பணி குறித்து மாவட்ட காவல்துறையினர்க்கு அறிவுரை அறிவுரை கூட்டம்...




தேர்தல் பாதுகாப்பு பணியின் போது காவல்துறையினர் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் பற்றி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிபாளர் அவர்கள் தலைமையில் மாவட்ட காவல்துறையினர்க்கு அறிவுரை கூட்டம் .

வருகின்ற அக்டோபர் 6-ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ. மணிவண்ணன் IPS அவர்கள் உத்தரவுபடி திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தேர்தல் பாதுகாப்பு பணியிலும் மற்றும் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில் இன்று 28.09.2021 இன்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவு படி திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினருக்கு தேர்தல் நடைபெறும் நாளான 06.10.2021 மற்றும் 09.10.2021 அன்று காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் கிருஷ்ணாபுரம் பாலன் மஹாலில் வைத்து சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சீமைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் திருநெல்வேலி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல்துறையினருக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து தகவல்களை விளக்கிக் கூறினார். மேலும் வாக்குச்சாவடிகளில் ஏதேனும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டால் மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கும் மாவட்ட காவல் அலுவலகத்திற்கும் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் காவலர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு முறைகளைப் முறையாக பின்பற்றி முகக்கவசம் அணிந்து பணியில் இருக்க வேண்டும் எனவும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரை வழங்கினார்.


இக்கூட்டத்தில் நில அபகரிப்பு சிறப்பு பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயபால் பர்ணபாஸ், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், வாக்குப் பெட்டி பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட காவல் அலுவலர்கள் , அதிகாரிகள் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

8 views0 comments
bottom of page