ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி மீது உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை...
https://youtu.be/ZtiKUCoAk8I

ஆருயிர் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் *திரு. ஆலடி அருணா* அவர்களால் 2004 ஆம் ஆண்டு நெல்லையில் நிறுவப்பெற்ற *ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி* மூலமாக கடந்த 15+ ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்களுக்கு தரமான கல்வி சேவையை வழங்கி வருகின்றோம்.
ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியின் *நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன*. இந்தத் தகவலை முழுமையாக மறுத்து அண்ணா பல்கலைக்கழகம் செய்தி வெளியிட்டது. மேலும், கல்லூரி நிர்வாகமும் தமிழக சைபர் கிரைம் காவல் துறையிடம் புகார் செய்து சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி மீது *இது போன்ற உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்* என இதன் மூலம் தெரிவித்துகொள்கின்றோம்.
*தரமான கல்வியை அறவழியில் வழங்குவதே எங்கள் பாதை*.
ஆலடி எழில்வாணன்
செயலாளர் - ஐன்ஸ்டீன் கல்லூரிகள்
திருநெல்வேலி