தூய்மை பணியாளரின் மகன் கல்லூரி படிப்பிற்கு உதவிசெய்த மின்வாரிய பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள்...



பாளையம்கோட்டை உபமின் நிலையத்தில் பகுதிநேர தூய்மை பணியாளராக பணிபுரியும் S.இசக்கி அவர்களின் மகன் E.மகாராஜன் கல்லூரி படிப்பிற்கு உதவி செய்யும்விதமாக மின்வாரிய பொறியாளர்கள், பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் முதல் பருவ கட்டண தொகை ரூபாய் 19, 250/-ஐ திருநெல்வேலி நகர்ப்புற செயற்பொறியாளர் S.முத்துக்குட்டி அவர்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் பாளையம்கோட்டை உதவி செயற்பொறியாளர் D.எட்வர்ட் பொன்னுசாமி, பாளை உபமின்நிலைய உதவி மின் பொறியாளர் திரேசா பாக்கியவதி, வி. எம். சாத்திரம் உதவி மின் பொறியாளர் G.செல்வம், கட்டுமான பிரிவு உதவி மின் பொறியாளர் E.ஜன்னத்துள் சிபாயா மற்றும் மின்வாரிய பணியாளர்கள் கலந்துகொண்டனர்.