top of page

தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள்...



உலகில் கடவுளுக்கு இணையாக மதிக்கப்படுபவர்கள் மருத்துவர்கள். அவர்களைது சேவையை போற்றி பாராட்டும் விதமாக ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி இந்தியாவில் மருத்துவர்கள் தினம் (Doctor's Day) கொண்டாடப்படுகிறது.


பீகார் மாநிலம் பாட்னா அருகே உள்ல பாங்கிபோர் என்ற ஊரில் 1882, ஜூலை 1-ம் தேதி பிறந்தவர் பிதான் சந்திரா ராய் (Dr. Bidhan Chandra Roy). ஏழைகள் மேல் மிகவும் அன்பு கொண்ட பி.சி.ராய், மருத்துவப் பணிக்கு தன்னை அர்ப்பணித்தவர்.


தன் வீட்டையே ஏழைகளுக்கான மருத்துவமனை கட்ட கொடுத்த டாக்டர் பி.சி.ராய், முதல் அமைச்சராக இருந்த காலத்தில்கூட ஏழைகளுக்கு தினமும் இலவச மருத்துவம் செய்தவர்.


இவர், தான் பிறந்த தேதியான (1962-ம் ஆண்டு) ஜூலை 1-ம் தேதியிலே மரணம் அடைந்தார்.


அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் மார்ச் 30-ம் தேதி டாக்டர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது என்றபோதிலும், டாக்டர் பி.சி.ராயின் நினைவாக இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.


இவரின் பெயரில் சிறப்பாக மருத்துவ சேவை செய்பவர்களுக்கு 1976-ம் ஆண்டு முதல் டாக்டர் பி.சி.ராய் விருது வழங்கப்பட்டு வருகிறது.


மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தன்னலமற்று மக்கள் நலம் காக்கும் மகத்தான பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும் மருத்துவர்கள் அனைவருக்கும் இந்திய மருத்துவர்கள் நாளில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். பிறப்பு எளிதாக அமைவதற்கும், இறப்பில் இருந்து உயிர்களை காப்பதற்கும் மருத்துவ சேவை அவசியமாகிறது என்பதன் அடையாளமாக இந்த நாள் விளங்குகிறது. தற்போதைய கொரோனா பேரிடர் காலத்தில் மருத்துவர்களின் சேவை இன்றியமையாததாய் இருக்கிறது. அதனை தொடர்ந்து, வெள்ளை உடுப்பு அணிந்த இராணுவம் போல அல்லும் பகலும் அரும்பணியாற்றுகின்றனர் மருத்துவர்கள். குறிப்பாக கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் தமிழ்நாட்டில் தீவிரமாக இருந்த நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்தது. அப்போது நாம் மேற்கொண்ட போர்க்கால நடவடிக்கைகளில், தளகர்த்தர்களாக - சிப்பாய்களாக, முன்கள வீரர்களாக பணியாற்றி, நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்த மருத்துவர்களுக்கு இந்நாளில் என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். எளிய மக்களின் உயிரையும், உடல்நலத்தையும் பாதுகாக்கும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில் வலுப்படுத்தப்பட்ட தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு மேலும் வலிமைபெற இந்த அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பை எதிர்நோக்குகிறேன். இது மக்களின் அரசு, மக்களின் உயிர்காக்கும் மருத்துவர்களுக்கான அரசாகவும் இருக்கும் என உறுதி வழங்குகிறேன். அதன் அடையாளமாக கொரோனா தடுப்பு பணியில் தங்கள் இன்னுயிரை ஈந்த மருத்துவர்களின் குடும்பத்துக்கு உடனடி நிவாரண உதவியாக ரூ.25 லட்சமும், பணியில் உள்ள மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.30 ஆயிரமும் வழங்கப்பட்டது. மருத்துவர்கள் மக்களை காக்கும் மகத்தான பணியை தொடர வேண்டும். இந்த அரசு மருத்துவர்களை பாதுகாக்கும் முன்கள வீரராக செயலாற்றும்; துணை நிற்கும்” என்று தெரிவித்துள்ளார்.

7 views0 comments
bottom of page