திமுக சார்பில் இராதாபுரம் ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் ம.கிரகாம்பெல் நலதிட்ட உதவி..



கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து பசியால் வாடிய இராதாபுரம் ஒன்றியம் இராதாபுரம் ஊராட்சி,சமூகரெங்கபுரம் ஊராட்சி,தெற்குகள்ளிகுளம் ஊராட்சி பகுதிகளிலுள்ள ஆட்டோ,கார் ஓட்டுனர்கள்,இசைக் கலைஞர்கள்,தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 500 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மசாலா பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்களை திமுக மானில வர்த்தக அணி இணைச் செயலாளரும்,திருநெல்வேலி மாவட்ட ஊராட்சியின் முன்னாள் தலைவருமான ம.கிரகாம்பெல் வழங்கினார்.நிகழ்ச்சியில் இராதாபுரம் ஒன்றிய திமுக செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ்,தலைமை பொதுக்குழு உறுப்பினர் மி.ஜோசப்பெல்சி,இராதாபுரம் ஊராட்சி செயலாளர் கோவிந்தராஜ்,மாவட்ட பொறியாளரணி துணை அமைப்பாளர் ஜோசப்சந்திரன்,மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் முருகன்,மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முரளி,இராதாபுரம் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் பரிமளம்,பெருமாள்,அகஸ்டின்,கிறிஸ்டோபர்,கணேசன்,பாண்டி,மீரான்,செல்லையா,முன்னாள் ஊராட்சித்தலைவர் செங்குட்டுவன்,சமூகரெங்கபுரம் தக்காளி குமார்,ஐயாக்குட்டி,முத்துராஜ்,மகாலிங்கம்,செல்லையா,பெருமாள்,துரைகுடியிருப்பு அருள்,விக்டர்,மூலக்காடு ராஜன்,முத்துநாடார்குடியிருப்பு அம்புரோஸ்,தெற்குகள்ளிகுளம் டாக்டர்.ஜெபஸ்டின் ஆனந்த்,டெர்மின்ராஜா,குணசேகரன்,ஆறுமுகம்,பிரதாப்சிங்,அஜித்மிக்கேல்,அகாஷ்மிக்கேல்,திசையன்விளை பேரூர் இளைஞரணி செயலாளர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.