இராதாபுரம் ஒன்றியம் அப்புவிளை ஊராட்சிப் பகுதியில் திமுகவினர் உதவி...





தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து உண்ண உணவின்றி தவித்த இராதாபுரம் ஒன்றியம் அப்புவிளை ஊராட்சிப் பகுதியிலுள்ள காமராஜ்நகர்,சிந்துநகர்,அப்புவிளை,காரம்பாடு ஊர்களில் 200 குடும்பங்களுக்கு அரிசி,பருப்பு,எண்ணெய்,காய்கறிகள் அடங்கிய நிவாரணப் பொருட்களை இராதாபுரம் ஒன்றிய திமுக செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் வழங்கினார்.உடன் தலைமை பொதுக்குழு உறுப்பினர் மி.ஜோசப்பெல்சி,மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முரளி,இராதாபுரம் ஊராட்சி செயலாளர் கோவிந்தன்,அகஸ்டின்,முன்னாள் மாவட்டபிரதிநிதி ரமேஷ்,கண்ணன்,நெல்சன்,பரமசிவம்,மதிமுக திசையன்விளை நகர செயலாளர் முருகன்,காரம்பாடு தாமஸ்,சுபாஷ்,வளன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
படம் - செய்தி : அம்பி@கல்யாணகுமார்