பள்ளிகளுக்கு சென்று கொரோனா தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாவட்ட காவல்துறையினர்




திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன், IPS. அவர்களின் அறிவுரையின் பேரில்,மாவட்ட காவல் துறையினர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு சென்று கொரோனா தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன்பேரில் கங்கைகொண்டான் காவல் ஆய்வாளர் திரு.பெருமாள், அவர்கள், கங்கைகொண்டான் அரசு பள்ளிக்கும்,மானூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.பழனி, அவர்கள் மானூர் அரசுப் பள்ளிக்கும் சென்று தலைமை ஆசிரியர் முன்னிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.