top of page

சிங்கத்தாகுறிச்சியில் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்*

*சிங்கத்தாகுறிச்சியில் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்*





தேசிய காசநோயகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் *(24.11.2022)* இன்று சிங்கத்தாகுறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து *மருத்துவ அலுவலர் டாக்டர்.கிஷோர் கௌதம் ராஜ்* அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட டி.ஆர்.டி.பி. ஒருங்கிணைப்பாளர் *திரு.செ.மாரியப்பன்* அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.

முதுநிலை காசநோய் ஆய்வுக்கூட மேற்பார்வையாளர் *திரு.ச.இசக்கி மஹாராஜன்* அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இம்முகாமில் 39 நபர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. 7 நபர்களுக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

டி.வி.ஸ்., ஸ்ரீனிவாசன் சேவைகள் அறக்கட்டளையின் கிராம வளர்ச்சி அலுவலர் *திரு.கணேசன்* நன்றி கூறினார்.

இம்முகாமில் எக்ஸ்ரே நுட்பனர் திரு.கிறிஸ்டின் குமாரதாஸ், ஆய்வகநுட்பனர் திருமதி.சுபா, சுகாதார பார்வையாளர் திருமதி.முத்துலட்சுமி, பல்நோக்கு மருத்துவனை பணியாளர் திருமதி.செல்வராணி, திரு.அரி பாலகிருஷ்ணன், சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் *திரு.அ.அப்துல் ரஹீம் ஹீரா* அவர்கள் செய்திருந்தார்.

7 views0 comments
bottom of page