தனித்திரு - சாதித்திரு ... ஊரடங்கு காலத்தில் வரைந்த ஓவியங்களால் கண்காட்சி - அசத்தும் மாணவி தீக்க்ஷனா
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை திருமால் நகர் பகுதியைச்சேர்ந்த புகைப்படக்கலைஞர் ராஜசேகர் - ஜனனி தம்பதியினரின் மகள் தீக்க்ஷனா. இவர் நெல்லை டான் போஸ்கோ பள்ளியில் 5ம் வகுப்பு படித்துவருகிறார். ஓவியம் வரைவதில் அதிக ஈடுபாடுள்ள இவர் பாளையங்கோட்டையில் உள்ள சிவராம் கலைக்கூடத்தில் 2ம் வகுப்பு முதல் ஓவியம் கற்றுவருகிறார். பள்ளி மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் நடைபெறும் ஓவியப்போட்டியில் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகள் பெற்றுள்ளார். இவர் தற்பொழுது ஊரடங்கு உத்தரவின் காரணமாக வீட்டில் இருக்கும் நேரத்தில் தனித்திரு - சாதித்திரு என்ற தலைப்பில் ஓவியங்களை வரைந்துள்ளார். இயற்கை காட்சிகள், தலைவர்கள் படங்கள், விழிப்புணர்வு ஓவியம், கருப்புவெள்ளை பென்சில் ஓவியங்கள் என தனது திறமைகளை வெளிக்காட்டி அதனை தனது வீட்டில் கண்காட்சியாக காட்சிப்படுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றுவருகிறார் மாணவி தீக்க்ஷனா. விடுமுறை காலத்தில் வீட்டிலிருந்து குறும்பு செய்யாமல் தனது ஓவிய திறமையின் மூலமாக சாதனை செய்துவரும் மாணவிக்கு பொதுமக்கள் சார்பாக பாராட்டுக்கள்...