top of page

நெல்லையின் நேர்மை குணம்.






நேற்று(28-04-2020) திருநெல்வேலி பாளையங்கோட்டை சலேத் சுந்தர்ராஜ் மற்றும் பஷீத் ஆகியோர் என் அலுவலகத்திற்கு வந்து அவர்கள் தன்னார்வலர்களாக பணியாற்றிய போது சாலையின் ஓரத்தில் ஒரு பையினை கண்டெடுத்ததாகவும் அதில் ஒரு விலையுயர்ந்த Apple laptop இருந்தது , அதனை உரியிவர்களிடம் சேர்க்க வேண்டும் எனக் கொடுத்தனர். சிறிது நேரத்தில் பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் தனது Laptop காணாமல் போனாதாக புகார் வந்தது. விசாரணை செய்ததில் அது அவருடையது என அறிந்து உரிமையாளரான லால்பகதூர் சாஸ்திரியிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது .


நெல்லையில் நேர்மை குணத்தின் எடுத்துக்காட்டாக விளங்கிய இளைஞர்களுக்கு சிறு தொகையினை அன்பளிப்பாக பாராட்டி வழங்கினேன்.அதனை பெற்றவுடன் தாங்கள் வறியவர்களுக்கு செய்து வரும் உதவிக்கு இந்த தொகையனை பயன்படுத்திக்கொள்ள கொள்வதாக சொன்ன இடத்தில் உயர்ந்து நின்றனர்.


Laptop பயன்படுத்துபவர்கள் அந்த bagல் முகவரி& செல்போன் எண் வைக்கும் போது காணாமல் போனால் உங்களை தேடி கொடுக்க ஏதுவாக இருக்கும்.


#அன்புசூல்உலகு


என்றும் அன்புடன்

ச. சரவணன்

காவல் துணை ஆணையர்

சட்டம் & ஒழுங்கு

திருநெல்வேலி மாநகரம்

28 views0 comments
bottom of page