top of page

திருநெல்வேலியில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு பிரத்யேக எண்...







திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது .


கட்டுமான பணிகள் , ஓட்டல் , சில்லறை விற்பனை , நடமாடும் வியாபாரிகள் , அழகை நிலையங்கள் , லாரி டிரைவர்கள் என அனைவரும் கணக்கெடுப்பு செய்யப்பட்டு உதவிகள் வழங்கப்படுகிறது .


மாவட்டம் முழுவதும் சுமார் 13000 பேர் உள்ளனர். மாநகர எல்லையில் மட்டும் சுமார் 1000 பேர் உள்ளனர்.


அவர்கள் வசதிக்காக உதவி எண்ணும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. அங்கு இந்தி தெரிந்த அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் . கடந்த 3 நாட்களில் சுமார் 100 அழைப்புகள் பெறப்பட்டு 1800 பேர் உதவி பெற்றுள்ளனர்.


வெளிமாநில தொழிலாளர் நலனை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் IAS , உதவி ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் IAS ஆகியோர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர் IPS அவர்களின் ஆலோசனையின் பேரில் வெளிமாநில தொழிலாளர் வசதிக்காக மாநகரின் முக்கிய இடங்களில் Helpline 944286699 குறித்த அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது .


என்றும் அன்புடன்

ச. சரவணன்

காவல் துணை ஆணையர்

சட்டம் & ஒழுங்கு

திருநெல்வேலி மாநகரம்

18 views0 comments
bottom of page