நெல்லை மாநகர் பகுதியில் அடுத்து அடுத்து பாதிப்புக்கு உள்ளாகும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் (DBC).
மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வீடுகள்தோறும் டெங்கு கொசுவை ஒழிக்கும் பணியில் அமர்த்தப்பட்டவர்கள் தான் DBC என்றழைக்கப்படும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள். தற்பொழுது கொரோனா நோய் பரவ தொடங்கியது முதல் மாநகராட்சி பகுதியில் உள்ள வீடுகளில் உள்ளவர்களது விபரங்கள் மற்றும் வீடுகளில் உள்ளவர்களுக்கு காய்ச்சல், இருமல், சளி போன்ற தொற்றுகள் இருக்கிறதா என்பதை கண்டறிவது முதல் வெளியூரிலிருந்து வந்தவர்கள், வெளியூருக்கு சென்று திரும்பியவர்கள் என்ற விபரங்களை சேகரிப்பது எல்லாம் இந்த DBC எனப்படும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களின் முக்கியமான பணியாகும்.
: ஒவ்வொறு நாளும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களது விவரம் வெளியானதும் அந்த பகுதியில் உள்ள DBC பணியாளர் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது வரை அந்த வீடுகளில் கிருமிநாசினி தெளித்தல் போன்ற பணிகளை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் உதவியுடன் செய்து வருகின்றனர் . நோய்த் தொற்றைத் தடுக்கும் பணியில் முதல் வரிசையில் நின்று போராடும் களப் போராளிகளாக செயல்பட்டு வரும் இந்த கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் மத்தியில் தற்போது நோய் தொற்று பரவ தொடங்கியுள்ளது. கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களின் சூப்பர்வைசர் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் தற்போது நெல்லை மாநகராட்சி பகுதியில் மட்டும் சுமார் ஐந்து பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இது நோய் தொற்று பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் DBC பணியாளர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது...
இவர்கள் தினக்கூலி அடிப்படையிலேயே இந்தப் பணிகளை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு வேறு விதமான பயண படியோ சலுகைகளோ கிடையாது. நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது வீடு என்று தெரிந்தும் அந்த வீட்டிற்கு சென்று நோயாளிகளிடம் பேசி அவர்களை மருத்துவமனைக்கு அனுப்புவது வரை அந்த இடத்திலேயே நின்று தங்களது பணிகளைச் செய்கின்றனர். நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் தூய்மைப் பணியாளர்களுக்கு ஆங்காங்கே உள்ள நலச் சங்கங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உதவித் தொகைகள் மற்றும் அரிசி, சமையல் சாமான்கள் போன்ற உதவிகளை அவ்வப்போது செய்து வந்தனர். ஆனால் இந்த DBC எனப்படும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு யாரும் எந்தவித உதவிகளும் இதுவரை செய்ததில்லை. தங்களது குடும்பத்தின் ஏழ்மை சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தங்களது குழந்தைகளை விட்டு விட்டு நேரடியாக நோய் தொற்றை தடுக்கும் களப்பணியில் ஈடுபட்டு வரும் இருந்த DBC பணியாளர்களுக்கு சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மட்டுமல்லாமல் அரசும், மாவட்ட நிர்வாகமும் உதவிகளை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது...
சரவண ராஜன்,
தலைமை செய்தி ஆசிரியர்,
www.nellaijustnow.com