நெல்லை என்.ஜி.ஓ காணியில் 2.8 கோடி மதிப்பீட்டில் சைக்கிள் பாதை அமைக்கும் பணி...
பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காணியில் 2.8 கோடி மதிப்பீட்டில் சைக்கிள் பாதை அமைக்கும் பணிகளை பாளை MLA, மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தனர்.






நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட 27வது வார்டு என்ஜிஓ காலனி பகுதியில் 2 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவில் சைக்கிள் பாதை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பாளைMLA அப்துல் வஹாப், நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணுசந்திரன், ஸ்மார்ட் சிட்டி சிறப்பு அதிகாரி நாராயணன் நாயர், மாநகராட்சி செயற்பொறியாளர் பாஸ்கர், மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளர் சுகிபிரேமலா, பாளையங்கோட்டை தாசில்தார் ஆவுடையப்பன், மேலப்பாளையம் மண்டல உதவி செயற்பொறியாளர் லெனின், உதவி பொறியாளர் சிவசுப்பிரமணியன், 27வது வார்டு நலச் சங்க கூட்டமைப்பு தலைவர் நல்லபெருமாள், பெரியகுளம் பராமரிப்பு கமிட்டி தலைவர் ஆறுமுகம், செயலாளர் வெள்ளையன், கூட்டுறவு சொசைட்டி சங்க தலைவர் சங்கரன், எழில்நகர் நலச்சங்க செயலாளர் முத்துகிருஷ்ணன், மாநகராட்சி குளம் பராமரிப்பு கமிட்டி தலைவர் முத்துசாமி, செயலாளர் சண்முகசுந்தரம், மாநகராட்சி நகராட்சி அலுவலர் சங்க கூட்டமைப்பு தலைவர் சீதாராமன் பாளையங்கோட்டை வருவாய் ஆய்வாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.