top of page

திருநெல்வேலியில் சைக்கிள் பார் சேஞ்ச் சேலஞ்ச் என்ற சைக்கிள் விழிப்புணர்வு பேரணி


















திருநெல்வேலி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகரின் பல்வேறு சாலைகளில் சைக்கிள் களுக்கான தனி வழித்தடம் அமைக்கும் அமைக்கப்பட்டு வருகிறது. இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி மத்திய ரோட்டரி சங்கம் மற்றும் நெல்லை பைசைக்கிள் சார்பில் சைக்கிள் பார் சேஞ்ச் சேலஞ்ச் என்ற சைக்கிள் விழிப்புணர்வு பேரணி பாளையங்கோட்டை பெருமாள்புரம் சாரா டக்கர் கல்லூரியில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவிற்கு நடந்தது. உதவி ஆட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்த பேரணியில் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையாளர் சரவணன் , திருநெல்வேலி மாநகராட்சி சீர்மிகு நகரத் திட்ட சிறப்பு அலுவலர் நாராயணன் நாயர் கலந்துகொண்டனர். மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளர் சுகிபிரேமலா உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் கூறுகையில் திருநெல்வேலி மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் 70க்கும் மேற்பட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதில் 10 பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில் 34 பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், இதில் பத்து பணிகளுக்கான டெண்டர் இன்னும் விடப்பட வேண்டியது உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த பணிகள் அனைத்தும் விரைவில் முடிவுறும் என்றும் அவர் கூறினார். சீர்மிகு நகரத் திட்ட சிறப்பு அலுவலர் நாராயணன் நாயர் அவர்கள் தெரிவிக்கையில் முதற்கட்டமாக நான்கு கிலோமீட்டர் தொலைவிற்காண சைக்கிள் பாதை அமைக்கும் பணி மூன்று மாதத்திற்குள் நிறைவடையும் என்றும் இதன் இதன் தொடர்ச்சியாக தேவைப்படும் பகுதிகளுக்கும் இந்த சைக்கிள் பாதை அமைக்கும் பணிகள் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்தார். திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல உதவி செயற்பொறியாளர் லெனின், சுகாதார அலுவலர் சாகுல் ஹமீது, சுசி மோட்டார் ஹரிபிரதான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

32 views0 comments