top of page

ரூபாய் 47 ஆயிரத்தை மீட்டுக்கொடுத்த மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினருக்கு பாராட்டு.


திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம், பண்ணையார்குளத்தை சேர்ந்த *இசக்கி (30)* என்பவர் இணையதளத்தில் ஆதார் பேமெண்ட் மூலமாக ரூபாய் 47 ஆயிரம் பணத்தை பெறுவதில் மோசடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இசக்கி பணத்தை மீட்டுத்தருமாறு *திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன் இ.கா.ப.,* அவர்களிடம் மனு அளித்தார். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, *மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ராஜு* அவர்களுக்கு உத்தரவிட்டதன் பேரில் *சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திரு.ராஜ் அவர்கள், உதவி ஆய்வாளர் திரு.ராஜரத்தினம், அவர்கள் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு உடனடியாக இசக்கி என்பவருடைய ரூபாய் 47 ஆயிரம் பணத்தை மீட்டு அதற்கான ஆவணத்தை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன் இ.கா.ப.,* அவர்கள் பணத்தின் உரிமையாளரிடம் 10.01.2023 இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.

*இவ்வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு ரூபாய் 47 ஆயிரம் பணத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்து சிறப்பான முறையில் பணிபுரிந்ததற்காக திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன் இ.கா.ப., அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.*

6 views0 comments
bottom of page