பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சைபர் கிரைம் காவல்துறை.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன் இ.கா.ப.,* அவர்கள் உத்தரவின்படி, *மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ராஜு* அவர்களின் மேற்பார்வையில் *சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் திரு. மோகன் மற்றும் காவலர் திரு. ராம்நயினார்* ஆகியோர் தாழையூத்து, சங்கர்நகர் பகுதியில் உள்ள கென்பிரிட்ஜ் மேல்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று மாணவ, மாணவிகளுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
அப்போது சைபர் கிரைம் காவல்துறையினர் கூறுகையில், சமீபகாலமாக சைபர் கிரைம் குற்றங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. சைபர் கிரைம் குற்றவாளிகள் எப்படி ஏமாற்றுகிறார்கள் என்றும், எப்படி ஏமாறாமல் இருப்பது என்றும் இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது மாணவிகளுக்கு செல்போனில் ஆன்லைன் Game விளையாடும் போது ஏற்படும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும் விளையாடும் போது வரும் வரும் தேவை இல்லாத link யை click செய்ய வேண்டாம் என்றும், link யின் மூலம் ATM card, Bank account பற்றி கேட்கப்படும் தகவல்களுக்கு பதில் அனுப்ப வேண்டாம் என்றும், ஆன்லைன் விளையாட்டு மூலம் அதிக பண மோசடி ஏற்படுவதால் நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்கள்.
பின் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து https://cybercrime.gov.in/ என்ற இணையதளத்தில் புகாரளிக்கவும்.மேலும் *1930* என்ற இலவச எண்ணிலும் சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளிக்கலாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.