top of page

கல்லூரி மாணவ, மாணவிகளிடம் இணையவழி குற்றங்கள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு...

நெல்லை மாநகரம் வண்ணாரப்பேட்டை FX கல்லூரி மாணவ, மாணவிகளிடம் இணையவழி குற்றங்கள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல்லை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர்.



நெல்லை மாநகர காவல் ஆணையாளர் திரு.S.இராஜேந்திரன் இ.கா.ப அவர்கள் உத்தரவின் பேரில், நெல்லை மாநகர மேற்கு காவல் துணை ஆணையாளர் திரு.K.சரவணகுமார் அவர்கள் மேற்பார்வையில், திருநெல்வேலி மாநகர எல்லைக்குட்பட்ட FX பொறியியல் கல்லூரியில் 12-01-2023 ம் தேதியன்று, மாணவ, மாணவிகளிடம் சமூக வலைதளங்களை பாதுகாப்பாக கையாள்வது குறித்தும், ATM கார்டு மற்றும் OTP குறித்தும், சமூக வலைத்தளத்தின் முலம் அறிமுகம் இல்லாத நபர்கள் தொடர்பு கொண்டால் அவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருப்பது பற்றியும், சமூக வலைதளம் மூலம் வேலைவாய்ப்பு மோசடி பற்றியும், அனைத்து இணையவழி குற்றங்கள் மற்றும் பண மோசடி நடைபெற்றால் உடனடியாக சைபர் கிரைம் இலவச உதவி எண்:1930 க்கு புகார் தெரிவித்தால் இழந்த பணம் முழுவதும் மீட்க முடியும் என்பது குறித்தும் மேலும் சைபர் கிரைம் காவல்துறையினரின் https://cybercrime.gov.in/ மேலும் அவசர காலங்களில் பெண்கள் உடனடியாக புகார் அளிக்க உருவாக்கப்பட்டுள்ள காவல் உதவி என்ற புதிய செயலி அறிமுகம் 60 க்கும் மேற்பட்ட சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த செயலியை Play store ல் இருந்து பதிவிறக்கம் செய்து இந்த செயலி மூலமும் இலவச உதவி எண்:1930 க்கு தொடர்பு கொள்ளலாம் போன்ற விழிப்புணர்வுகளை, நெல்லை மாநகர சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.சண்முகவடிவு அவர்கள் தலைமையிலான தொழில் நுட்ப பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திரு.முத்துக்குமார் அவர்கள் மற்றும் சைபர் கிரைம் போலீசார் ஆகியோர் கல்லூரி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு வாசகங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

7 views0 comments
bottom of page