Blue bugging மூலம் இணையவழி குற்றம் புரிதல் தொடர்பான விழிப்புணர்வு.
*திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினரின் விழிப்புணர்வு பதிவு.

*"Blue bugging மூலம் இணையவழி குற்றம் புரிதல் தொடர்பான விழிப்புணர்வு."*
மோசடி செய்பவர்கள் Bluetooth ON செய்யப்பட்ட கணினி/கைபேசியை குறிவைப்பது அல்லது பாதிக்கப்படும் நபரின் கைபேசியில் Bluetooth-ஐ ON செய்து தன்னுடைய கைபேசியில் இணைத்து கொள்வது.
கணினி/கைபேசியின் Bluetooth இணைக்கப்பட்டதும்,அதில் Malware சாப்ட்வேர்-ஐ நிறுவி விடுகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக Blue bugஎன்ற செயலாக்கம் பொறுத்தப்பட்ட உடன், பாதிக்கப்படும் நபரின் அனைத்து விபரங்களும் குற்றவாளியால் எடுக்கப்பட்டுவிடும்.
மேலும், மற்றவர்களின் கைபேசியை அவர்களுக்கு தெரியாமல் அழைப்புகளை மேற்கொண்டு தவறான முறையிலும் பயன்படுத்துகின்றனர்.
*முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:*
குற்றவாளிகள் நமது சாதனத்தில் நம் அனுமதியின்றி நுழைய இயலாது. ஆகையால், தங்களுக்கு தொடர்பில்லாத/அறியப்படாத அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி ஆகியவற்றில் விழிப்பாக இருந்தால் பாதிப்பிற்கு உள்ளாகாமல் இருக்கலாம்.
பெரும்பாலான குற்றவாளிகள் குறைவான பாதுகாப்பு வசதிகளுடைய சாதனத்தை குறிவைப்பதால், உங்களுடைய கணினி/கைபேசியின் பாதுகாப்பை சமீபத்திய பாதுகாப்புடன் உறுதி செய்து கொள்ளலாம்.
ஒரு வேளை நீங்கள் பாதிக்கப்பட்டால் https://cybercrime.gov.in/ என்ற இணையதளத்தில் புகாரளிக்கவும்.மேலும் *155260* என்ற இலவச எண்ணிலும் புகார் அளிக்கலாம்.