நெல்லை மாநகர போலீசாருக்கு கபசுர குடிநீர் வழங்கிய சித்த மருத்துவர்கள்...



திருநெல்வேலி மாநகர ஆயுதப்படையில, 23-04-2020 ம் - தேதியன்று பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரியால், வழங்கப்பட்ட கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு கசாயம் காவலர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி சித்த மருத்துவ கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவ பேராசிரியர்கள் ஆகியோர் ஏற்பாட்டில், நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் திரு.சரவணன் அவர்கள் காவலர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தாருக்கு கபசுர குடிநீரை வழங்கினார்கள். சுமார் 300 காவலர்கள் பயன் பெற்றார்கள். உடன் மனித உரிமைகள் கண்காணிப்பு பிரிவு உதவி ஆணையாளர் திரு.சேகர் அவர்கள் கலந்து கொண்டார்கள்.