கோவிட்-19 விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை தென்காசி நகராட்சி ஆணையாளர் ஹசீனா தொடங்கிவைத்தார்
இந்திய அரசு, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், மக்கள் தொடர்பு கள அலுவலகம், திருநெல்வேலி மற்றும் தென்காசி நகராட்சி சார்பில் நடைபெற்ற கோவிட்-19 விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை தென்காசி நகராட்சி ஆணையாளர் திருமதி ஹசீனா அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். மத்திய மக்கள் தொடர்பு கள அலுவலகத்தின் கள விளம்பர உதவி அலுவலர் போஸ்வெல் ஆசீர், நகராட்சி சுகாதார ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் மகேஸ்வரன் மற்றும் பலர் உடன் இருந்தனர். மேலும் கோவிட்-19 குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.