top of page

நெல்லை மாநகராட்சி பகுதியில் டீ கடைகளில் கண்ணாடி டம்ளர். சில்வர், பிளாஸ்டிக் டம்ளர் பயன்படுத்த தடை








திருநெல்வேலி மாநகராட்சி இராமையன்பட்டி குப்பை சேகரிக்கும் மைய வளாகத்தில் பல வகை மரக்கன்றுகளை நடவு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில்

திருநெல்வேலி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் முதன்மை நிர்வாக அலுவலர் நாராயணன் நாயர், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், வேளாண் விஞ்ஞானி விஜய் ஆனந்த், நிர்வாக பொறியாளர் பாஸ்கர், மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளர் சுகிபிரேமலா, பாளையங்கோட்டை உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த், திருநெல்வேலி நேச்சர் கிளப் ஹரி பிரதான், சேவா பாரதி ராம் பாபு, மாநகராட்சி மக்கள் தொடர்பு துணை இயக்குனர் அண்ணா. சுகாதார ஆய்வாளர்கள் சாகுல்ஹமீது, முருகன், மேலப்பாளையம் மண்டல உதவி வருவாய் அலுவலர் மணிகண்டன் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் சுமார் 17 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கும் மரக்கன்றுகள் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட ராமயன்பட்டி உரக்கிடங்கு பகுதியில் இன்று சுமார் 1300 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. மேலும் இதே பகுதியில் சுமார் 3000 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் மரக்கன்று நட விருப்பமுள்ள பொதுமக்கள் மாநகராட்சியை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்தார். கொரோனா தடுப்பு பணியில் திருநெல்வேலி மாநகராட்சியில் காண்டாக்ட் டிரேசிங் டீம் 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விபரங்களை சேகரித்து அவர்களை சிகிச்சைக்கு அனுப்புதல், பின்னர் சிகிச்சை முடிந்து வந்த பின்பு தொடர் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளில் அவர்கள் ஈடுபடுவார்கள். மேலும் மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவுறுத்தலின் பேரில் மாநகர பகுதியில் ஒவ்வொரு கிழமைகளிலும் ஒவ்வொரு வகையான கடைகளுக்கு அன்று விடுமுறை அளிக்கப்பட்டு அந்த நாளில் தூய்மைப்படுத்தும், கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை அந்த நிறுவனம் மேற்கொள்ள வேண்டும் என்றும் பணியாளர்களுக்கு அன்று நோய்தொற்று பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். நெல்லை மாநகராட்சி பகுதியில் உள்ள டீ கடைகள் மற்றும் குளிர்பான கடைகளில் கண்ணாடி டம்ளர். சில்வர் டம்ளர், பிளாஸ்டிக் டம்ளர் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எளிதில் மக்க கூடிய காகித கப்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.









11 views0 comments