மேலப்பாளையத்தில் தடைசெய்யப்பட்ட கேரி பேக்குகளை பயன்படுத்திய வடை கடைக்காரருக்கு அபராதம்.


திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பயன்படுத்தக்கூடாது என்று மாநகராட்சி மூலம் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி யாரேனும் கேரி பேக்குகளை பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து அவ்வப்போது மாநகராட்சி சார்பில் ஆய்வு நடத்த மாநகராட்சி ஆணையாளர் திரு. கண்ணன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இன்று மேலப்பாளையம் சுகாதார ஆய்வாளர் சங்கரநாராயணன் ஆய்வுசெய்தபோது மேலப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வடை கடையில் தடை செய்யப்பட்ட கேரி பேக்குகளை பயன்படுத்துவதை கண்டு அதை பறிமுதல் செய்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடை உரிமையாளர் சாலை மறியலில் ஈடுபடுவதாக கோரி ரோட்டில் அமர்ந்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மாநகராட்சி உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடை உரிமையாளருக்கு அபராதம் விதித்தனர். மேலும் தொடர்ந்து தடை செய்யப்பட்ட கேரி பைகளை உபயோகப்படுத்தினால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்...