பாளையில் மாநகராட்சி ஆணையாளர் திடீர் ஆய்வு- சமூக இடைவெளி கடைபிடிக்காமல் செயல்பட்ட 4 கடைகளுக்கு சீல்


திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் சில கடைகளில் சமூக இடை வெளி இல்லாமல் நின்று பொதுமக்கள் பொருட்கள் வாங்கி செல்வதாக மாநகராட்சி ஆணையாளர் கண்ணனுக்கு புகார் வந்தது. இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
பாளை மண்டல உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த் மற்றும் சுகாதார அலுவலர் அரசகுமார் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் நடராஜன், பெருமாள், உதவி வருவாய் அலுவலர் காசி விஸ்வநாதன், சிறப்பு வருவாய் ஆய்வாளர் வடிவேல் முருகன், SBM செந்தில் முருகன் ஆகியோர் அடங்கிய குழு பாளையம்கோட்டை மார்க்கெட் மற்றும் திருச்செந்தூர் சாலை பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க அனைவரும் கட்டாயம் முகக்கவசங்களை அணிய வேண்டும் எனவும், ஒருவருக்கொருவர் சமூக இடைவெளியுடன் இருக்க வேண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சமூக இடைவெளி கடைபிடிக்காமல் செயல்பட 4 கடைகள் உடனடியாக அடைக்க பட்டது.