top of page

நெல்லை புதிய பேருந்து நிலையம் பிக் பஜார் அருகே உள்ள ஆம்னி பேருந்து நிலையத்தில் செயல்படுகிறது...

தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போக்குவரத்து சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டத்திற்குள் மட்டும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை முதல் அரசு பேருந்துகள் இயங்க தொடங்கின. திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் பெருமாள்புரம் பிக் பஜார் அருகே உள்ள ஆம்னி பேருந்து நிலையத்தில் பேருந்து நிலையம் செயல்படுகிறது. இதனை அடுத்து திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையர் சுகிபிரேம்லா பேருந்து நிலைய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுகாதார பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் அமரும் இருக்கைகள், கழிப்பிடம் போன்றவற்றில் கிருமிநாசினி தெளித்தல், பேருந்துகளில் பொதுமக்கள் அதிகமாக தொட்டு பயன்படுத்தக்கூடிய கைப்பிடிகள் இருக்கைகள் போன்றவற்றிற்கும் கிருமிநாசினிகள் தெளிக்கும் பணியினையும் மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையர் சுகிபிரேம்லா ஆய்வு செய்தார். திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல சுகாதார அலுவலர் சாகுல்ஹமீது, உதவி வருவாய் அலுவலர் மணிகண்டன் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் இந்த ஆய்வின்போது கலந்து கொண்டனர்...











:



24 views0 comments