top of page

நெல்லை ஹைகிரவுண்ட் பகுதியில் திடீர் ஆய்வு..புகையிலை பொருட்கள் பறிமுதல்..




திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர், G.கண்ணன், சுகாதார அதிகாரி சரோஜா, மாவட்ட நியமன அலுவலர் மரு.ம. ஜெகதீஸ் சந்திர போஸ் ஆகியோர் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் அ.ரா.சங்கரலிங்கம், சுகாதார ஆய்வாளர் S.நடராஜன் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் C.பெருமாள், M.செல்லதுரை, மேற்பார்வையாளர்கள் M.ஆறுமுகம்,M.செந்தில் ஆறுமுகம், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் கனகபிரியா, சீதாலட்சுமி, கொசுப் புழு ஒழிப்பு பணியாளர் கண்ணன் சதீஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஹைகிரவுண்ட் மருத்துவமனை அருகில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை கலந்த உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது அரசு மருத்துவமனை எதிரில் உள்ள பிரசன்னா ஷாப்பிங் சென்டரில் இருந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை கலந்த கீழ்கண்ட உணவு பொருட்கள் கணேஷ் புகையிலை, கூலிப் புகையிலை, சைனி கைனி புகையிலை, ஆகியவை மறைத்து வைத்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை கலந்த உணவு பொருட்கள் சுமார் 800 கிராம் கைப்பற்றப்பட்டன. அதன் மதிப்பு ரூபாய் 1,500 ( ஆயிரத்து ஐநூறு மட்டும்).

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை கலந்த உணவு பொருட்கள் விற்பனை செய்த கடையின் உரிமையாளர் குருவைய்யா த/பெ. செல்லத்துரை என்பவருக்கு உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட நியமன அலுவலர் மரு.ம. ஜெகதீஸ் சந்திர போஸ் ரூபாய் 5000/- ( ஐயாயிரம் மட்டும்) அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

7 views0 comments
bottom of page