கொரோனாவை தடுக்கதிருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் தூய்மை பணிகள் தீவிரம்...



திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் அவர்களின் உத்தரவின் பெயரில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்றை தடுக்கும் விதமாக தூய்மை பணிகள் தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை மண்டலம் சீவலப்பேரி ரோடு பகுதியில் நடைபெற்று வரும் தூய்மை பணிகளை பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த் ஆய்வு செய்தார். பின்னர் காமராஜர் காலனி பகுதியில் உள்ள மாநகராட்சி நுண்உரம் செயலாக்க மையத்தில் ஆய்வு மேற்கொண்ட பாளையங்கோட்டை உதவி ஆணையாளர் அங்கு பணியில் உள்ள ஒப்பந்த பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிப்பது குறித்து அறிவுரைகளை வழங்கினார்.


இதேபோல் திருநெல்வேலி மண்டலத்திற்கு உட்பட்ட வண்ணாரப்பேட்டை வடக்கு புறவழிச்சாலை பகுதியில் உள்ள கழிவு நீர் ஓடைகள் சுத்தம் செய்யப்பட்டது. சுகாதார ஆய்வாளர் முருகன் உள்ளிட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.