நெல்லை மாநகராட்சி முழுவதும் காய்ச்சல் முகாம் கபசுரக் குடிநீர் வழங்கும் முகாம்...
கடந்த சில நாட்களாக நெல்லை மாநகராட்சி பகுதியில் அதிகரித்து வரும் நோய் தொற்றை தடுக்கும் விதமாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் அவர்கள் ஆங்காங்கே கபசுரக் குடிநீர் முகாம் மற்றும் காய்ச்சல் தடுப்பு முகாம் அமைத்து பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கவும் உடல் வெப்ப பரிசோதனை பல்ஸ் சோதனை செய்யவும் உத்தரவிட்டிருந்தார். அதன்படி திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் தினமும் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இன்று இந்த பணிகளை திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் திரு. கண்ணன் அவர்கள் திடிர் ஆய்வு செய்தார்..













இன்று காலை திருநெல்வேலி டவுன் மேல ரதவீதி பகுதியில் ஸ்ரீ சத்ய சாய் சேவா சங்கம் சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கும் முகாமை மாநகராட்சி ஆணையர் அவர்கள் கண்ணன் அவர்கள் தொடங்கி வைத்தார்...

