திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் மின்மோட்டார் பொறுத்தி குடிநீரை உறிஞ்சினால் கடும் நடவடிக்கை...

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் விதமாக குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார் கொண்டு குடிநீரை உறிஞ்சுவதை தடுக்கும் விதமாக அதிரடி ஆய்வுகளை மேற்கொள்ள திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டார். அதன்படி மேலப்பாளையம் மண்டலம் ஆமீன்புரம் 9வது தெரு பகுதியில் மேலப்பாளையம் மண்டல உதவி செயற்பொறியாளர் பொறியாளர் லெனின் மற்றும் இளநிலைப் பொறியாளர் ஜெயகணபதி உள்ளிட்ட குழுவினர் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டதில் அனுமதிக்கு புறம்பாக மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுவது கண்டுபிடிக்கப்பட்டு 2 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டது..