திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல பகுதிகளில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்க்கும் பணி.





வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை தடுப்பதற்க்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இன்று முதல் முழு ஊரடங்கு இரண்டு வாரங்களுக்கு தமிழக அரசால் அமல்படுத்தப்பட்டடுள்ளது.
இந்நிலையில் கொரோனா அதிகம் பாதிப்புள்ள மாவட்டங்களில் ஒன்றான நெல்லை மாவட்டத்தில் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியை சுகரதானா அமைப்பின் உயர்கல்வி முதன்மை செயலாளர் அபூர்வா IAS, நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் கடந்த 8ம்தேதி தொடங்கி வைத்தனர்.
இவ்வகை ட்ரோன்கள் கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட சென்னையில் அதிக நெரிசலான… அணுக முடியாத பகுதிகளில் 15 நாட்களுக்கு பயன்படுத்தப்பட்டு.. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் பெரும் வெற்றியும் பெற்றது.
தற்போது நெல்லையில் வேகமாக கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் நெல்லை மாநகராட்சி , மற்றும் அண்ணா பல்கலை கழகம், தக்ஷா ஆளில்லா அமைப்புகள் இணைந்து நெல்லையில் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.
இன்று திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.