மேலப்பாளையத்தில் பூங்காவிற்கான இடத்தில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு அகற்றம்.




திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட டக்கரம்மாள்புரம் சோதனைச் சாவடி அருகே உள்ள அல் ஹாதி நகரில் மாநகராட்சி பூங்காவிற்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையர் சுகிபிரேமலா தலைமையில் உதவி செயற்பொறியாளர் லெனின், இளநிலைப் பொறியாளர் ஜெய கணபதி ஆகியோர் மாநகராட்சி பணியாளர்கள் உடன் அங்கு சென்று அனுமதியின்றி மாநகராட்சி பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்பை ஜேசிபி எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். மேலப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) நெடுஞ்செழியன் அவர்கள் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்...