பாளையங்கோட்டையில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம் மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு.
நெல்லை மாநகராட்சி ஆணையாளர் திரு. கண்ணன் உத்தரவு படி மாநகர நல அலுவலர் டாக்டர் சதீஷ் குமார் அறிவுரை படி பாளையம்கோட்டை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி நவீன இயந்திரம் மூலமாக தெளிக்கப்பட்டது. மேலும் பிளீச்சிங் பவுடர் கொண்டு அப்பகுதி முழுவதும் தூய்மை பணியாளர்கள் மூலமாக நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள பட்டது. இப்பணியினை சுகாதார அலுவலர் திரு. அரசகுமார் ஆய்வு செய்தார்கள். உடன் சுகாதார ஆய்வாளர் நடராஜன் மேற்பார்வையாளர் பழனி, முருகன், தூய்மை இந்தியா பணியாளர்கள் உடன் இருந்தனர்