நெல்லை டவுன் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு பேரணி...




நெல்லை டவுண் சந்திபிள்ளையார் கோயிலில் இருந்து லாலா கார்னர், தொண்டர் சன்னிதி. வழியாக பாறையடிபச்சேரி வரை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது இதில் வாகனத்தில் கட்டப்பட்ட ஸ்பீக்கர் மூலமாக முகக் கவசம் அணிவது, கைகளை சுத்தமாக வைப்பது சம்பந்தமாகவும், சமூக இடைவெளியை பின்பற்றுவது பற்றியும் பிரச்சாரம் மேற்க்கொள்ளப்பட்டது, இப்பிரச்சாரத்தில் துணை ஆணையாளர் சரவணன், டவுண் உதவி ஆணையாளர் சதீஷ்குமார், டவுண் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், தண்ணார்வ இளைஞர்கள் கலந்து கொண்டனர்