வழிபாட்டுத் தலங்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றின் நிர்வாகிகள் மற்றும் மதத் தலைவர்களுடன் ஆலோசனை.





திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் ஆகியவற்றின் நிர்வாகிகள் மற்றும் மதத் தலைவர்களுடன் திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையர் சுகிபிரேமலா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கொரோனா நோய் நோய் தொற்று நோய்த் தொற்றைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகிகள், மதத்தலைவர்கள் மற்றும் திருமண மண்டபங்களின் உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. கூட்டத்தில் திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல உதவி செயற்பொறியாளர் லெனின், சுகாதார அலுவலர் சாகுல்ஹமீது, சுகாதார ஆய்வாளர் சங்கரநாராயணன் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்...