நெல்லை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரேநாளில் 95 பேருக்கு நோய்த்தொற்று...








நெல்லை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரேநாளில் 95 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நெல்லையில் நேற்று வரை 1030 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 1125 ஆக உயர்வு.
அதிகபட்சமாக மாநகர பகுதியில் 72 பேர் இன்று பாதிப்பு. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கிருமி நாசினி மற்றும் பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டனர். மேலும் அந்தந்த வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நபர்கள் குறித்த ஸ்டிக்கர் ஒட்டினர்...