நெல்லையில் உணவின்றி தவிக்கும் குஜராத் இளைஞர்....




குஜராத் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஆரிப் ஹுசைன். இவர் தனியார் சொட்டு நீர்ப்பாசன உபகரணங்களை விற்பனை செய்யும் நிறுவனத்தில் விளம்பர வாகன ஓட்டுநராக பணியாற்றிவருகிறார். தற்பொழுது நெல்லை மாவட்டத்தில் உள்ள தங்களது விநியோகஸ்தருக்காக விளம்பர பணியில் ஈடுபட்டுவருகிறார். கடந்த 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டநிலையில் தனது விளம்பர வாகனத்திலேயே தங்கி வருகிறார். நெல்லை புதிய பேருந்து நிலையத்தின் தெற்கு நுழைவு வாயில் பகுதில் உள்ள தங்களது விநியோகஸ்தரின் கடை அருகே தனது வாகனத்தை நிறுத்தி அதில் இரவு பொழுதை கழிக்கும் அவர் பகல் வேலையில் புதிய பேருந்துநிலையம் உள்ளே உள்ள மரத்தடியில் தனது வாகனத்தை நிறுத்தி அதில் தனது செல்ல நாய்குட்டியுடன் தங்கி வருகிறார்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்ட நிலையில் உணவின்றி தவித்து வருகிறார். கையில் உள்ள பிஸ்கட்களை கொண்டு தானும் தனது நாய்குட்டியும் பசியாறிக்கொண்டிருப்பதாக கூறும் இவர் உணவுக்காக யாரை கேட்பது என்று தெரியாமல் தவித்து வருகிறார். இவருக்கு உணவு வழங்கிட தன்னார்வ அமைப்புகள் அல்லது மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.