குமரி மாவட்டத்தின் கோரோனா நோய்த்தொற்று அதிகம் பாதித்த பகுதிகளில் விழிப்புணர்வு வாகன பிரச்சாரம்...




மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலகம், திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி இணைந்து குமரி மாவட்டத்தின் கோரோனா நோய்த்தொற்று அதிகம் பாதித்த பகுதிகளில் விழிப்புணர்வு வாகன பிரச்சார நிகழ்ச்சியை நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் திருமதி. ஆஷா அஜித் துவக்கி வைத்தார்... இதில் மாநகர நல அலுவலர் மருத்துவர் விஜயசந்திரன், திருநெல்வேலி களவிளம்பர அலுவலர் திருமதி. ஜுனி ஜேக்கப் , கள விளம்பர உதவி அலுவலர் திரு. போஸ்வெல் ஆசிர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்... கோரோனா குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.