திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் நோய்தொற்று பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு முகாம்
திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் கொரோனா நோய்தொற்று பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நோய்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நோய்த்தொற்று பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கிருமிநாசினி தெளித்தல், கபசுரக்குடிநீர் வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் எடுத்துவருகிறது. மேலும் நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் நோய்த்தொற்று கண்டறியப்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் பொதுமக்களுக்கு ஆட்டோ மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படுகிறது. திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலத்தில் என்.ஜி. ஓ. ஏ.காலனி பகுதியில் நடந்த காய்ச்சல் தடுப்பு முகாமில் சித்த மருத்துவர் வினோதினி மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கலந்து கொண்டனர்...இதேபோல் மாநகராட்சி முழுவதும் நோய்த்தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் அவர்குள் உத்தரவின்பேரில் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டுவருகிறது...








