தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது - 48 லட்சம் மதிப்பிலான 131 பவுண் தங்க நகைகள் பறிமுதல்...

4 மாத தீவிர விசாரணை மேற்கொண்டு, தொடர் திருட்டில் ஈடுபட்ட நபரை கைது செய்து அவரிடமிருந்து 48 லட்சம் மதிப்பிலான 131 பவுண் தங்க நகைகளை பறிமுதல் செய்த அம்பாசமுத்திரம் உட்கோட்ட காவல் குழுவினருக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.பல்பீர் சிங், அவர்கள், மேற்பார்வையில் அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளர் திரு.சந்திரமோகன் அவர்கள் தலைமையிலான போலீசார் அம்பை பகுதியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட எதிரியை 4 மாதமாக தீவிரமாக தேடிவந்தனர்.
இதற்காக திருட்டு நடந்த இடத்தில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், சந்தேக நபர் பயணம் செய்த பேருந்தை கண்டறிந்ததை தொடர்ந்து திருநெல்வேலி பேருந்து நிலைய சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.
இதில் திருநெல்வேலி- திருச்செந்தூர் - வழித்தடத்தில் எதிரி சென்று வருவது தெரியவந்தது. மேற்படி வழித்தடங்களில் உள்ள பேருந்து நிலையங்களில் தினமும் தீவிர விசாரணை செய்தும், திருநெல்வேலி மற்றும் அத்துடன் பேருந்து நிலையங்களில் தினமும் இரண்டு போலீசாரை நியமித்து கண்காணித்து வரப்பட்டது. பின்னர் தொடர்ந்து வழித்தடங்களில் உள்ள பேருந்து நிலையங்களில் விசாரணை செய்ததில் எதிரி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு ஆத்தூர் பகுதியில் தங்கியிருந்து திருடி வருவது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அம்பை போலீசார் 22.11.2022 அன்று எதிரியை கைது செய்து அவரிடமிருந்து 131 பவுண் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
மேற்படி வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டு எதிரியை கைது செய்த *அம்பாசமுத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.சந்திரமோகன், பயிற்சி உதவி ஆய்வாளர் திரு.இளையராஜா, அம்பாசமுத்திரம் உட்கோட்ட தனிபடை சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.சிவக்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி. ஜெயலட்சுமி, தலைமை காவலர்கள் திரு.முரளி, திரு.வின்சென்ட், திரு.வெற்றி செல்வன், மு.நி.காவலர்கள் திரு.ராஜேஷ், திரு.மகாராஜன், திரு.இசக்கிபாண்டி. திரு.சுந்தர், திரு.நாமராஜன், மு.நி.கா.திருமதி. செல்வமேரிலலிதா, திருமதி.அனிதா ஆகியோரை நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு வெகுமதி வழங்கவும் உத்தரவிட்டார்.*