இந்திய சீனா எல்லையில் நடந்த கலவரத்தில் உயிரிழந்த ரானுவ வீரர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் அஞ்சலி






நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக 26.06.2020 இன்று வெள்ளிக்கிழமை அன்று, இந்திய சீனா எல்லையில் நடந்த கலவரத்தில், உயிரிழந்த ரானுவ வீரர்களுக்கு,அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நெல்லை வண்ணாரப்பேட்டை காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.சங்கரபாண்டியன், மாநகர பொருளாளர் ராஜேஷ் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் 2 பேர் வீரமரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலிசெலுத்தும்விதமாக மொட்டையடித்துக்கொண்டார்.
News sponser : https://lapureherbals.in/
