ஊதிய உயர்வு கேட்டு போராடி உயிர் நீத்த மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் அஞ்சலி..



ஊதிய உயர்வு கேட்டு போராடி உயிர் நீத்த மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கே.சங்கர பாண்டியன் தலைமையில் கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் இன்று காலை மலர் தூவி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் எஸ்.ராஜேஷ் முருகன், மானூர் வட்டார தலைவர் சொர்ணம், மண்டல தலைவர் எஸ்.எஸ் மாரியப்பன், மாநகர் மாவட்ட பொது செயலாளர்கள் மனோகரன், பாக்கியகுமார்,சொக்கலிங்ககுமார், கிழக்கு மாவட்டம் மூத்த காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் முல்லை லெனின் பாரதி, மாவட்ட செயலாளர் ரயில்வே கிருஷ்ணன் ,மாவட்ட சேவாதள செயலாளர் மயில்ராவணன், மாவட்ட துணை தலைவர் வெள்ளபாண்டியன்,மாவட்ட செயலாளர் பரணி இசக்கி, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் முஹம்மது அனஸ் ராஜா,கூந்தன்குளம் சாமி மாவட்ட செயலாளர் கே.எஸ்.மணி,மாவட்ட துணை தலைவர் சிவன் பெருமாள் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்