பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்...




அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உத்தரவின்பேரில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நெல்லை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி கலந்துகொண்டார். முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் எச். வசந்தகுமார், தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எஸ். ராமசுப்பு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேல்துரை,மாநில பொதுச்செயலாளர் வானமாமலை, மேற்கு மாவட்ட பொருளாளர் முரளிராஜா, முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுந்தரராஜ பெருமாள், மாநகர் மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், மாவட்ட செயலாளர் சிவக்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இருசக்கர வாகனத்தை பாடையில் ஏற்றும் நூதன போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதற்கு காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவிக்கவே சிறிது நேரம் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
News sponser : https://lapureherbals.in/
