top of page

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.



குடும்பத்தில் பூர்வீகச் சொத்தை பங்கு வைப்பதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நெல்லை தச்சநல்லூரைச் சேர்ந்த திருமலைநம்பி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி 5 லிட்டர் பெட்ரோலை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்

நெல்லை தச்சநல்லூரைச் சேர்ந்தவர் திருமலைநம்பி வயது 51 இவருக்கு நான்கு உடன்பிறந்த சகோதரர்கள் இருப்பதாக கூறப்படுகிறது நெல்லை மாவட்டத்தில் பல லட்சம் மதிப்புடைய பூர்வீக சொத்து இவர்கள் குடும்பத்திற்கு உள்ளது சொத்தை பங்கு வைத்து தனக்குத் தராமல் சகோதரர்கள் திருமலை நம்பியை ஏமாற்றி வந்ததாக தெரிகிறது இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவர் காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் வந்ததாகவும் கூறப்படுகிறது ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இந்த நிலையில் மனு நீதி நாளான இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த திருமலைநம்பி ஆட்சியர் அலுவலக வளாக வாசலில் தான் கையோடு கொண்டு வந்திருந்த 5 லிட்டர் பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றார் காவல்துறையினர் கண்முன்னே நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது உடலில் தீயை பற்ற வைக்கும் முன் அவரை காப்பாற்றிய காவல்துறையினர் உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றி காப்பாற்றிய தோடு பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர் பூர்வீகச் சொத்தை தராமல் ஏமாற்றியதாக தான் இந்த முடிவை எடுத்ததாக திருமலைநம்பி தெரிவித்துள்ளார் மேலும் தனக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் மட்டுமே ஆனதாகவும் அவர் கூறியுள்ளார் காவல் துறையின் மாவட்ட ஆட்சியர் என அரசு அதிகாரிகள் பலரிடம் மனு அளித்தும் தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்தார் அதனால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர் கூறியுள்ளார் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


File. Suside attempt

36 views0 comments
bottom of page