top of page

நுண் உர செயலாக்க மையத்தில் பணியாற்றியபோது ஏற்பட்ட விபத்தில் கையை இழந்த பெண்ணுக்கு 1 லட்சம் உதவி...


திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்துக்கு உட்பட்ட என். ஜி. ஓ. பி காலனி நுண் உர செயலாக்க மையத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றிய மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி என்ற பெண் கடந்த மாதம் குப்பைகளை துண்டுகளாக்கும் இயந்திரத்தில் பணி செய்து கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக அந்த இயந்திரத்தில் அவரது கை சிக்கி துண்டானது. இதனையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பாக்கியலட்சுமிக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக அறிவித்தார். அதற்கான காசோலையை இன்று திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் அவர்கள் மேலப்பாளையத்தில் உள்ள பாக்கியலட்சுமி இல்லத்திற்கு நேரில் சென்று காசோலையை வழங்கினார். நிகழ்ச்சியில் மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளர் சுகி பிரேமலா, சுகாதார அலுவலர் சாகுல்அமீது, உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்..

18 views0 comments
bottom of page