நெல்லை மாநகரத்தில் வார்டு விழிப்புணர்வு காவல் அதிகாரி திட்ட துவக்க விழா.




நெல்லை மாநகரத்தில் உள்ள 55 வார்டுகளுக்கும் மக்களோடு மக்களாக இணைந்து, அந்தந்த வார்டு பொது மக்களுக்கு தேவையானவற்றை அறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டம் சார்ந்த மற்றும் சட்டவிரோத செயல்களை கண்டறிந்து, மக்களுடன் இணைந்து செயல்பட வார்டு விழிப்புணர்வு காவலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களின் அடையாளம் காட்டும் விதமாக தலைக்கவசம் வழங்கி பேரணியை 26-01-2021 ம்-தேதியன்று நெல்லை மாநகர காவல் ஆணையாளர் திரு.தீபக் மோ.டாமோர் இ.கா.ப அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
திருநெல்வேலி மாநகர காவலின் மக்களை நோக்கி மாநகர காவல் திட்டத்தின் அடுத்த படியாக இத்திட்டம் விளங்கும் . காவல்துறை மற்றும் பொதுமக்களிடையே உள்ள இடைவெளியை இத்திட்டம் வெகுவாக குறைக்கும் என்று
திருநெல்வேலி மாநகர சட்டம் & ஒழுங்கு காவல் துணை ஆணையர்
ச. சரவணன் தெரிவித்துள்ளார்.