நெல்லையில் பலத்த போலீஸ் சோதனை. Smartcop செயலியில் வாகன ஓட்டிகளின் விபரங்கள் பதிவு...







கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், திருநெல்வேலி மாநகராட்சி, மற்றும் நெல்லை மாநகர காவல்துறை இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மாநகரின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் சோதனை சாவடிகளை அமைத்து பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியே சுற்றுவதை தடுத்துவருகின்றனர். மேலும் இதை மீறி வெளியே தேவை இல்லாமல் சுற்றுபவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்வதுடன் வழக்கும் பதிவு செய்யப்படுகிறது. நெல்லை மாநகர காவல்துறை smartcop என்ற செயலியை உருவாக்கியுள்ளது. இந்த செயலி மூலம் வாகன சோதனை சாவடியில் வாகனத்தின் பதிவு எண், உரிமையாளர் பெயர், ஊர், ஓட்டுநர் உரிமம் எண், வெளியே செல்லும் காரணம், செல்லும் இடம் ஆகியவை பதிவு செய்யப்படுகிறது. அவ்வாறு பதிவு செய்யப்பட நபர் அடுத்த சோதனை சாவடியில் நிறுத்தி smartcop செயலியில் வாகன எண் பதிவு செய்தவுடன் அவரது முழு விபரமும் தெரிய வருவதுடன் அவர் அனுமதிக்கப்பட்ட 2 கிலோமீட்டர் தொலைவுக்குள் பயணம் செய்கிறாரா அல்லது அதை மீறி வருகிறாரா என்பது தெரியவரும். அவ்வாறு விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களது வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்படுகிறது. மேலும் பறிமுதல் செய்யப்பட வாகனம் அதற்கென கொடுக்கப்பட்ட படிவத்தினை பூர்த்தி செய்து 10 நாட்களுக்கு பிறகே திரும்பப்பெறமுடியும்.
இன்று 20.04.2020 காலை முதல் மாநகரின் பல்வேறு பகுதியிலும் வாகன சோதனை தீவிரபடுத்தப்பட்டுள்ளது. தகுந்த காரணமின்றி வெளியே சுற்றுவதாக சந்தேகப்படுபவர்களின் விபரங்கள் smartcop செயலியில் பதிவு செய்யப்படுகிறது.