CCTV பொருத்துவோம்பாதுகாப்பை பலப்படுத்துவோம்...

ஒரு படத்தை பார்த்த கணத்தில் மனதில் மகிழ்ச்சி பொங்கி கண்களில் நீர் வருமா என்றால் வரும் என்பதே பதிலாகும். நாள் நேரம் காலம் பார்க்காமல் உழைத்தும் புரிந்து கொள்ளாமல் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாகும் காவல்துறையினரை தொடர்ந்து உழைக்க தூண்டுவது இது போன்ற சாமனியர்களின் கண்களில் இருந்து வரும் இது போன்ற ஆனந்தக் கண்ணீரே!! கடந்த வெள்ளியன்று இரவு சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் தன் தாயின் அருகில் உறங்கி கொண்டிருந்த 8 மாதக் குழந்தை காணமல் போகிறது. தஞ்சாவூர் நரிக்குறவர் இனத்தை சார்ந்த அந்த தாய் கண்ணீருடன் காவல் நிலையத்தை அணுகுகிறார். துரித விசாரணை மேற்கொண்டு 150க்கு மேற்பட்ட CCTVகளை ஆய்வு செய்து பெசண்ட் நாகர் முதல் ஜாகீர்கான் பேட்டை வரை சென்று 36 மணி நேரத்தில் குழந்தையை மீட்டு 5 குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை , அடையாறு காவல் துணை ஆணையர் பகலவன் IPS தலைமையிலான தனிப்படையினரின் அயராத உழைப்பு மிகுந்த பாராட்டுக்குரியது . நெல்லை மாநகர காவல்துறை சார்பில் பாராட்டு பூங்கொத்துகள். “CCTV பொருத்துவோம் பாதுகாப்பை பலப்படுத்துவோம்” #அன்பைவிதைப்போம் #மனிதம்வளர்ப்போம் என்றும் அன்புடன் ச. சரவணன் காவல் துணை ஆணையர் சட்டம் & ஒழுங்கு திருநெல்வேலி மாநகரம்