நெல்லையில்,வடமாநில போர்வெல் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை




நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையோரம் ஏராளமான போர்வெல் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
இதில் ஏராளமான வடமாநில போர்வெல் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். 144 தடை உத்தரவின்போது இவர்கள் வேலை இல்லாமல் போர்வெல் லாரிகளிலேயே தங்கி இருந்துள்ளனர்.
தற்போது புதிதாக போர்போடும் வேலை இல்லாதததால் போர் லாரி உரிமையாளர்கள் மற்றும் புரோக்கர்கள் இவர்களுக்கு சம்பளம் வழங்காமல் தினசரி சிறிதளவு உணவு மட்டும் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இன்று வடமாநில தொழிலாளர்கள் பலர் ஒன்று கூடி வண்ணார்பேட்டை பகுதிக்குவந்த அங்கு பாதகாப்பு பணியில் நின்ற போலீசாரிடம் தங்களை சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
போர் லாரி உரிமையாளர்கள் அவர்களை சொந்த ஊர் அனுப்பவில்லை என்று குற்றம்சாட்டிய அவர்கள் இதுகுறித்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார்மனு கொடுத்துள்ளனர். இதுகுறித்து போலீசாரும், அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.